மாநகராட்சி ஆணையர் குறித்து அவதூறு பரப்பிய ஒப்பந்ததாரர் உள்பட இருவர் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையரான மகேஸ்வரி, முறையாக பணி செய்யவில்லை எனக்கூறி ஒப்பந்ததாரரான சுடர்மணியின் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மகேஸ்வரி குறித்து சுடர்மணி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மகேஸ்வரி புகாரளித்த நிலையில் சுடர்மணி உள்பட இருவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















