டெல்லியில் ரயிலில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவியது.
தென்கிழக்கு டெல்லி துக்ளகாபாத்தில் இருந்து ஓக்லா நோக்கி வந்து கொண்டிருந்த தேஜ் விரைவு ரயிலில், 2 பெட்டிகளில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதையறிந்த ஓட்டுநர், ரயிலை உடனடியாக நடுவழியில் நிறுத்தினார். பயணிகள் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கினர்.
தகவலறிந்த தீயணைப்புத் துறையினர், 6 தீயணைப்பு வாகனங்களில் வந்து தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் யாருக்கும் எந்தவொரு சேதமும் ஏற்படாத நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.