மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தெலங்கானாவில் பாஜக- காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
17 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவில், பாஜகவும், காங்கிரஸும் தலா 8 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.
கடந்த தேர்தலில் 9 தொகுதிகளில் வென்ற பாரத ராஷ்டிர சமிதி, இந்த முறை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல், கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஹைதராபாத் தொகுதியில் போட்டியிட்ட மஜ்லிஸ் கட்சி தலைவர் ஓவைசி, 3 லட்சத்து 38 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.