நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, இந்திய வரலாற்றில் ஒரு சாதனை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.
இந்திய வரலாற்றில் இது ஒரு சாதனை என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வெற்றியை அளித்த பொதுமக்களை தலை வணங்குவதாகவும், கடந்த பத்து ஆண்டுகளை போல பொதுமக்களின் விருப்பங்களை நிறைவேற்ற பாஜக பணியாற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாஜக தொண்டர்களின் கடின உழைப்புக்கு தலை வணங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.