வேலூரில் திடீரென பெய்த கனமழையால்பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், வேலூர் மாநகர் பகுதியான சத்துவாச்சாரி, வள்ளலார் காகிதப்பட்டறை, வேலப்பாடி மற்றும் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.
மாவட்டத்தில் 100 டிகிரி ஃபேரன் ஹீட் அளவிற்கு வெயில் வாட்டி வந்த நிலையில், மழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.