விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் 50-வது திரைப்படம் மகாராஜா, ஜூன் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி கவனம் ஈர்த்ததுடன், சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது.
இந்த நிலையில், மகாராஜா திரைப்படம் ரிலீசாகும் தேதி அறிவித்தது தொடர்பாக போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டு உள்ளது.
















