மாசி மாத அமாவாசையை ஒட்டி மயான கொள்ளை விழா!
Sep 2, 2026, 05:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாசி மாத அமாவாசையை ஒட்டி மயான கொள்ளை விழா!

Manikandan by Manikandan
Feb 17, 2026, 11:08 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடைபெற்ற மயான சூறை கொள்ளை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மாசி மாத அமாவாசையை ஒட்டி, வந்தவாசியில் உள்ள அங்காளம்மன் கோயிலில் மயான கொள்ளை விழா நடைபெற்றது.

இதில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி அங்காளம்மன் ஊர்வலமாக மயானத்திற்கு வந்தார்.

அப்போது பக்தர்கள் உடம்பில் எலுமிச்சை பழங்களை குத்தியும், தெய்வங்களின் வேடங்களை அணிந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இதில் வந்தவாசி மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்களும் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல் திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயிலில் மாசிமக அமாவாசையை ஒட்டி மயான கொள்ளை வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான விழா இன்று அதிகாலை நடைபெற்றது.

அப்போது அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன், ஊர்வலமாக ஈசானிய மயானத்திற்கு சென்றார். அப்போது பக்தர்கள் காளி, சிவன், பார்வதி, முருகன் போன்ற தெய்வங்களின் வேடங்களை அணிந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அங்காளம்மன் கோயிலிலும் மயான கொள்ளை விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் காளி வேடங்களை அணிந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் அங்குள்ள மயானத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜையும், வழிபாடும் செய்யப்பட்டது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயான கொள்ளை உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பக்தர்கள், காளி வேடமணிந்தபடி, மயானத்தை ஆக்ரோஷமாக சூறையாடி, நகரின் பல்வேறு வீதிகளில் நடனமாடியபடி வலம் வந்தனர். மேலும், சிறப்பு அலங்காரத்தில் பூத வாகனத்தில் அமர்ந்து வந்த அங்காளம்மனை, வழியெங்கும் பக்தர்கள் வழிபட்டனர்.

Tags: Thiruvannamalaimasiமயான கொள்ளைGrave robberytamilnadutempledevotteesdevottees crowd
Share
Tweet
SendShare
Previous Post

ராமதாஸ் இல்லம் அருகே நடைபெற்ற மயான கொள்ளை விழாவில் மோதல்!

Next Post

கந்தர்வக்கோட்டை அருகே மஞ்சுவிரட்டு போட்டி – சீறிப்பாய்ந்த காளைகள்!

Related News

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies