நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 240 இடங்களில் வெற்றி வெற்றிபெற்றுள்ளது. ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இதனையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன், அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது தேசிய ஜனநாக கூட்டணி சார்பில் மத்தியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
மேலும் குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்குதல் உள்ளிட்டவை தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.