இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்த அதிமுக 7 இடங்களில் டெபாசிட் தொகையை இழந்திருப்பது மிகப்பெரிய வேதனை என சசிகலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவினர் பெற்ற வெற்றியை, பொய்யான வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களை ஏமாற்றி பெற்றதாகவே கருதமுடிகிறது எனத் தெரிவித்துள்ளார்.
ஒரு சிலரின் தனிப்பட்ட சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காக அதிமுக அழிவதை இனியும் வேடிக்கை பார்க்கமுடியாது எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்ககீகாரத்தை இழந்து, அதிமுக 7 இடங்களில் டெபாசிட் தொகையை இழந்திருப்பது மிகப்பெரிய வேதனை எனவும் கூறியுள்ளார்.
அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் எனவும், சொந்த விருப்பு வெறுப்புகளை களைந்து அதிமுக நிர்வாகிகள் அனைவரும் வாருங்கள் எனவும் வலியுறுத்தியுள்ளார். வரும் 2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை, உடனே ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.