அயர்லாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, உலகக்கோப்பை தொடரில் முதலாவது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.
‘டி-20’ உலக கோப்பை தொடருக்கான போட்டிகள் நடைபெற்று வருகிறது.இதற்கான ஏ- பிரிவு லீக் ஆட்டம் நியூயார்க் மாகாணத்தில் உள்ள நாசவ் கவுன்டி மைதானத்தில் நடைபெற்றது.
இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதிய இந்தப்போட்டியில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 16 ஓவரில் 96 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 12 புள்ளி 2 ஓவரில் 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.