தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் கன மழை பெய்தது.
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தநிலையில், அழகியமண்டபம், மணலி, மேக்காமண்டபம், முட்டைகாடு, குமாரபுரம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.