திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அரசு மருத்துவமனையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மருத்துவமனை முழுவதும் இருளில் மூழ்கியது.
பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக அப்பகுதி முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டது.
இதனையடுத்து மருத்துவமனையில் இருந்த நோயாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதனால் மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஜெனரேட்டர்களை இயக்கி மின்சார வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.