பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவுடன் மூத்த அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவுடன் மூத்த அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இதில் தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதல்வல் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது மீண்டும் நரேந்திர மோடியை பிரதமராக்க, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், பா.ஜ.க. தலைவர் ஜெ.பி. நட்டாவுடன் மூத்த அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் புதிய அமைச்சரவை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து தேசிய கூட்டணி தலைவர்களை ஜெ.பி.நட்டா சந்திப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.