மோடி பிரதமராக வேண்டும் என்பதற்காக சுயேட்சை மற்றும் சிறிய கட்சிகளை சேர்ந்த 10 எம்பிக்கள் என்.டி.ஏ. கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜுன் 4 -ஆம் தேதி எண்ணப்பட்டன.
இதில், பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி 292 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி 232 இடங்களிலும் வெற்றி பெற்றன. பிற கட்சிகள் 17 இடங்களில் வெற்றி பெற்றன.
தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறுவதற்கு 272 எண்ணிக்கை தேவை என்ற நிலையில், பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இதனால், பாஜக ஆட்சி அமைக்க, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் பீகார் முதல்வர் நிதீஷ்குமாரின் ஜே.டி.யூ கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு, 7 சுயேட்சை வேட்பாளர்களும், 3 சிறிய கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களும் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தொடர்பு கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.