ராஜஸ்தானில் சாலை விபத்தில் படுகாயமடைந்த எதிர்க்கட்சி தலைவர் டிகா ராம் ஜூலி விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக அம்மாநில முதலமைச்சர் பஜன்லால் சர்மா தெரிவித்துள்ளார்.
டெல்லி-மும்பை விரைவுச் சாலையில் பண்டரேஜ் அருகே சென்ற கொண்டிருந்தபோது டிகா ராம் ஜூலியின் கார் விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், எக்ஸ் வலைதளத்தில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் பஜன்லால் சர்மா வெளியிட்டுள்ள பதிவில், டிகா ராம் ஜூலி விரைவில் குணமடைந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.