னாதனம் குறித்து உதயநிதி தொடர்ந்து பேசினால், திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவே முடியாது - ஸ்ரீதர் வேம்பு
Oct 1, 2026, 03:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

னாதனம் குறித்து உதயநிதி தொடர்ந்து பேசினால், திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவே முடியாது – ஸ்ரீதர் வேம்பு

Ramamoorthy S by Ramamoorthy S
May 14, 2026, 09:03 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சனாதனம் குறித்து விமர்சிக்கும் உதயநிதிக்கு எதிராக பெரியளவில் போராட்டங்கள் வெடிக்காததற்கு காரணம் மதப்பற்று இல்லாதது அல்ல என்றும், தமிழக மக்களிடையே சனாதனம் சொல்லுக்கான விளக்கம் மாறுபட்டிருப்பதே காரணம் எனவும் ஜோகோ நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சனாதனம் குறித்து தொடர்ந்து தாக்கி பேசும் உதயநிதிக்கு எதிராக தமிழ் இந்துக்களிடம் கொந்தளிப்பு ஏற்படாததற்கு மொழியே காரணம் என தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழியில் “சனாதனம்” என்ற சொல் வழக்கமான பயன்பாட்டில் இல்லை என்றும்,
பெரும்பாலான தமிழ் மக்களுக்கு இச்சொல் பற்றித் தெரியாது எனவும் கூறியுள்ளார்.

“தர்மம்” என்ற சொல் தமிழில் மிகவும் பரவலாகப் புழக்கத்தில் உள்ளது என்றும்,
தமிழ்நாட்டில் ‘தர்மபுரி’ என்ற பெயரில் ஒரு மாவட்டமே உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மொழியின் பயன்பாட்டில் உள்ள “தர்மம்” என்ற சொல் இந்தியில் குறிக்கப்படும் “இந்து தர்மம்” என்பதையே நடைமுறையில் உணர்த்துகிறது எனக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழில் நடைமுறையில் உள்ள தர்மம் என்ற சொல்லை உதயநிதி தாக்கி பேசியிருந்தால் “அதர்மத்தை” போதிப்பதாகக் கூறி பரவலான விமர்சனத்திற்கு உள்ளாகியிருப்பார் என தெரிவித்துள்ளார்.

தர்மம் என்ற சொல்லை தவிர்த்து சனாதனம் என்ற சொல்லை உதயநிதி தேர்ந்தெடுள்ளார் எனக்கூறியுள்ள அவர்,தமிழ் மக்களிடையே அச்சொல்லை உதயநிதி பிரபலப்படுத்தி வருகிறார் என சாடியுள்ளார்.

சனாதனம் குறித்து உதயநிதி தொடர்ந்து பேசுவதால் தமிழ்நாட்டில் வலுவாக இருந்த திமுகவுக்கு எதிரான அலை வீசியது என தெரிவித்துள்ள அவர், திமுகவால் இதுவரை எந்தத் தேர்தலிலும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற முடியவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்து தெய்வங்கள் மீது திமுக தொடர்ந்து தொடுத்து வந்த தாக்குதல்களின் மூலமாகவே, திமுக தோல்வியடைந்துள்ளதாகவும், சனாதனம் குறித்து பேசாததால் திமுகவுக்கு எதிரான அலையை அதிமுக சாதகமாக பயன்படுத்தி கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பணம் செலவழித்தும், தவெகவை எதிர்த்து திமுகவால் வெற்றி பெறமுடியவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், சனாதனம் குறித்து உதயநிதி தொடர்ந்து பேசினால், திமுக கட்சி மீண்டும் ஆட்சிக்கு வராமலேயே போய்விடும் என ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

Tags: udhayanidhiSridhar VembusanatanaZoho Corporation
Share
Tweet
SendShare
Previous Post

ஐபிஎல் கிரிக்கெட் – கொல்கத்தா அணிக்கு எதிரான பெங்களூரு அபார வெற்றி!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்; உச்சநீதிமன்றம் உத்தரவு

அக்.15 முதல் தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கும்; வானிலை ஆய்வு மையம்

அனைத்து வார இறுதி நாட்களும் விடுமுறை என வெளியான அறிக்கை உண்மையல்ல; மத்திய அரசு விளக்கம்

இன்றைய தங்கம் விலை!

மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை விரிவாக்கம்; நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

சரவெடி உற்பத்திக்கு நிபந்தனைகளுடன் அனுமதி – உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

அக்.11ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் – சிறப்பு தொகுப்பு!

நாட்டுவெடி தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்து; மூவர் உயிரிழப்பு

மக்கள் பிரதிநிதிகளின் அலட்சியப் போக்கால் பின் தங்கிய சிவகங்கை;மக்களின் மனக்குமுறலை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு….

ப்ளை துபாய் விமானத்தில் நடந்தது என்ன ?; விரிவாக பார்க்கலாம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பாக செயல்படுகிறார்; உச்சநீதிமன்றம் பாராட்டு

சரவெடி தயாரிக்க விதிக்கப்பட்ட தடை வாபஸ்; பிரதமர் மோடி அரசின் உறுதியான நிலைப்பாடு வெற்றி

சத்தியஞான சபை பெருவெளியில் எந்தவித கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது; கிராம மக்கள் வாக்குவாதம்

குதிரை பேர வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடை நவ.23 வரை நீட்டிப்பு

விபிஜி ராம்ஜி திட்டத்தில் பணியாற்றுபவர்களை குறிவைத்து மதபிரசாரம்; குவியும் கண்டனம்

2004ல் நடந்த மாணவி தற்கொலை; ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு வழக்கு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies