என்டிஏ எம்.பி-க்கள் குழு தலைவராக பிரதமர் மோடி தேர்வு!
Nov 6, 2025, 06:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

என்டிஏ எம்.பி-க்கள் குழு தலைவராக பிரதமர் மோடி தேர்வு!

Web Desk by Web Desk
Jun 7, 2024, 03:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் குழு தலைவராக பிரதமர் மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை பெற்றது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக பிரதமர் மோடி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தேசிய ஜனநாயக எம்பிக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத்சிங், தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஏசி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த மோடிக்கு எம்பிக்கள் மற்றும் தலைவர்கள் எழுந்து நின்று கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். அரசியல் சாசன புத்தகத்தை வணங்கிய பின்னர் பிரதமர் மோடி மேடைக்கு சென்றார்.

இதனைத்தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் குழு தலைவராக பிரதமர் மோடியை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்மொழிந்தார். மத்திய அமைச்சர் அமித் ஷா, குமாரசாமி, சந்திரபாபு நாயுடு. நிதிஷ் குமார் உள்ளிட்ட தலைவர்கள் வழிமொழிந்து பேசினர்.

இதனையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் குழு தலைவராக பிரதமர் மோடி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

அப்போது எம்பிக்கள் மோடி, மோடி என உற்சாக குரல் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் பின்னர் பிரதமர் மோடிக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகிய இருவரும் பிரதமர் மோடிக்கு திருப்பதி வெங்கடாஜலபதி படத்தை பரிசாக வழங்கினார்.

Tags: pmmodispeechPM Modi selected as NDA MPs group leader!
ShareTweetSendShare
Previous Post

ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை அதிகரிக்க இன்னும் அதிகமாகப் பணியாற்ற விரும்புகிறோம்!- பிரதமர் மோடி

Next Post

ஜூன் 24ம் தேதி தொடங்குகிறது சட்டப்பேரவை கூட்டம்!

Related News

மேற்குவங்கம் : காலணி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

முஸ்லிம் மத போதகர் ஜாகிர் நாயக், வங்கதேசத்தில் நுழைய தடை!

ராமநாதபுரம் : ஃபிளக்ஸ் பேனர்கள் வைப்பது தொடர்பாக இரு தரப்பு மோதல்!

பிரதமரின் சரும பராமரிப்பு குறித்து கேட்ட ஹர்லீன் தியோல்!

தாய்லாந்தில் மிஸ் யுனிவர்ஸ் போட்டி – பெண்களை அவமதிப்பதாக கூறி வெளியேறிய பல நாட்டு அழகிகள்!

திமுகவில் பெண்களை இழிவுபடுத்தினால் கூடுதல் பொறுப்பு வழங்கப்படுகிறது – வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

ஒவ்வொரு முறையும் மாற்றி மாற்றி பேசும் டிரம்ப்!

அமலாக்கத்துறையை பாராட்டிய நிதி நடவடிக்கை பணிக்குழு!

விஜயின் ஜனநாயகன் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

Memory Chip பற்றாக்குறை – உயரும் போன்கள், லேப்டாப்கள் விலை?

இந்திய அரசியலுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை – பிரேசில் மாடல்

நவ.10 ஆம் தேதி நடைபெறுகிறது மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடாதிபதியின் மணிவிழா!

பீகாரில் துணை முதல்வர் விஜய் குமார் கார் மீது தாக்குதல்!

பால கட்டுமான பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்த நபர் பலி!

குடியாத்தம் அருகே தனியார் பள்ளி வேனில் சிக்கி 4 வயது சிறுமி உயிரிழப்பு!

திருப்பத்தூர் : ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு தேங்கி நிற்கும் மழை நீர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies