அதிமுகவை ஒன்றுபடுத்துவோம், வென்று காட்டுவோம் என்கிற வாசகங்கள் அடங்கிய போஸ்டர் சிவகங்கையில் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் தமிழகத்தில் அதிமுக ஒரு இடங்களில் கூட வெற்றி பெறாமல் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் சிவகங்கையின் பல்வேறு பகுதிகளில், “ஒன்றுபடுத்துவோம், வென்று காட்டுவோம்” என்கிற தலைப்பில் “அதிமுகவை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல உறுதியேற்போம்” உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
ஓபிஎஸ் அணியினரால் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.