நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மணிமுத்தாறு பகுதியில் கடந்த சில நாட்களாக மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளை அப்பகுதியில் நடமாடிய சிறுத்தை வேட்டையாடியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
எனவே சிறுத்தை அச்சுறுத்தல் இருப்பதால் அதனை பிடிக்க அப்பகுதி மக்கள் வனத்துறையிடம் கோரிக்கை வைத்த நிலையில் சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிர முயற்சிகளை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
















