சென்னை, கோயம்பேடு சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கோயம்பேடு சாலைகளில் அதிக அளவு பள்ளங்கள் உள்ளதால், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதாகவும், இதை பற்றி அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.