ராமோஜி குழும நிறுவனர் ராமோஜி ராவ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ராமோஜி ராவ் காருவின் மறைவு மிகவும் வருத்தமளிப்பதாகவும், இந்திய ஊடகங்களில் புரட்சியை ஏற்படுத்திய தொலைநோக்கு பார்வையாளராக அவர் செயல்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அவரது செழுமையான பங்களிப்பு பத்திரிகை மற்றும் திரைப்பட உலகில் அழியாத முத்திரையை பதித்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.\
அவருடன் பல்வேறு சந்தர்பங்களில் உரையாட வாய்ப்பு கிடைத்ததாக கூறியுள்ள பிரதமர், அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.