நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரது தோட்டத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கடந்த மாதம் உவரி அருகே கரைசுத்துபுதூரில் அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி ஆய்வாளர் உலக ராணி தலைமையில், 32-க்கும் மேற்பட்ட தடயவியல் நிபுணர்கள், கரைசுத்து புதூரில் ஜெயக்குமாரின் தோட்டத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
மொத்தம் 7 ஏக்கர் உள்ள தோட்டத்தில், ஓர் ஏக்கரில் மட்டுமே சோதனை நடைபெற்றது. எனவே சோதனையை விரிவுபடுத்த சிபிசிஐடி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.