வேலூர் மாவட்டம் ஜவ்வாது மலையை ஒட்டியுள்ள கிராமங்களில் முறையாக சாலைவசதி அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
ஜவ்வாதுமலை தொடரில் அமைந்துள்ள பீஞ்சமந்தை ஊராட்சியில் பாலாண்டூர், புதூர், கோராத்தூர் உள்ளிட்ட 14-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களமைந்துள்ளது.
இந்நிலையில் மலை கிராம மக்கள் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக 12கி.மீ தொலைவில் உள்ள ஒடுகத்தூர் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இப்பகுதியில் உள்ள சாலைகள் ஆம்புலன்ஸ் வாகனம் கூட வர முடியாத நிலையில் குண்டும் குழியுமாக உள்ளதால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மேலும் மாணவர்கள் வெகு தொலைவு சென்று கல்வி கற்கும் நிலை உள்ளது என்றும், தங்களது கிராம ஊராட்சிகளை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என்றும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.