ஆந்திராவில் இஸ்லாமியர்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீடு தொடர்ந்து செயல்படுத்தப்படுமென தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபுவின் மகன் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.
இட ஒதுக்கீடு என்பது திருப்திப்படுத்தும் அரசியல் இல்லை என்றும், ஆந்திராவில் சிறுபான்மையினரின் வருமானம் குறைவாக இருப்பதால், அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்கவே இடஒதுக்கீடு வழங்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து பயணிக்க விரும்புவதாகவும் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.