ஆவடி அருகே வெள்ளானூரில் வருவாய்த்துறை ஆர்.டி.ஓ. வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வெள்ளானூர் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டூரில் அரசுக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதாக வந்த புகாரின் பேரில், ஆர்.டி.ஓ. கற்பகம் அங்கு விசாரணை மேற்கொண்டார்.
அப்போது, அரசு நிலத்தில் வாலிபார் விளையாடி கொண்டிருந்த இளைஞர்களை அவர் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், முறையாக ஆய்வு செய்யாமல், இளைஞர்களை திட்டிய ஆர்.டி.ஓ. கற்பகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.