காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே தேவரியம்பாக்கம் கிராமத்தில் வயலுக்குச் சென்ற விவசாயி இடி தாக்கி உயிரிழந்தார்.
தேவரியம்பாக்கம் பகுதியில் இடியுடன் கூடிய பெய்த கனமழையால், விளைநிலத்தில் தண்ணீர் தேங்கியது. இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் தனது வயலில் தேங்கிய மழை நீரை அகற்றியபோது, இடி தாக்கி உயிரிழந்தார்.
இதுகுறித்து ஒரகடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.