ஆந்திர மாநிலம், நெல்லூர் அருகே சென்றுக்கொண்டிருந்த சொகுசுப்பேருந்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லூரில் இருந்து பயணிகளுடன் விஜயவாடா நோக்கி தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது.
உல்வப்பாடு அருகே பேருந்து சென்றுக்கொண்டிருக்கும் போது திடீரென கரும்புகையுடன் தீப்பற்றி எரிய தொடங்கியது, இதனால் பேருந்தில் இருந்து பயணிகள் அலறியடித்தப்படி இறங்கினர்.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் பேருந்து முழுவதும் எரிந்து சாம்பலானது.