ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள மீனவ கிராமங்களில் கடல் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு கல்லறை தோட்டத்தில் புதைக்கப்பட்ட உடல்களின் எலும்புக்கூடுகள் வெளியே தெரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ரோஜ்மா நகர் கடற்கரை கிராமத்திலுள்ள கல்லறை தோட்டத்தின் நுழைவு வாயில், கடல் அரிப்பினால் ஏற்கனவே விழுந்து விட்ட நிலையில், தற்போது மனித எலும்புக்கூடுகள் வெளியே தெரியத் தொடங்கியுள்ளன.
எனவே மண் அரிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்க இப்பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டுமெனவும், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.