ரஷியாவில் ஆற்றில் மூழ்கி 4 இந்திய மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 4 மாணவர்கள் ரஷியாவில் உள்ள நோவ்கோரோட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வந்தனர்.
இந்நிலையில் அந்த மாணவர்கள் ஓய்வு நேரத்தின்போது வோல்கோவ் ஆற்றில் இறங்கியுள்ளனர். அப்போது நீரின் வேகம் அதிகரித்ததால் 4 மாணவர்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அதில் இருவரின் உடல் மீட்கப்பட்ட நிலையில், மேலும் இரு மாணவர்களின் உடல்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.