காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது.
ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கடத்தி செல்லப்பட்ட இஸ்ரேலிய பணய கைதிகளில் 4 பேரை இஸ்ரேல் சிறப்புப்படை நேற்று மீட்டது.
அப்போது நுசைரத் முகாம் மீது இஸ்ரேல் படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
400க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலில் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.