வடமாநிலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தேசிய தலைநகர் டெல்லியில் கடும் தண்ணீர் பஞ்சத்தை மக்கள் சந்தித்து வருகின்றனர். பொதுமக்களின் சிரமத்தைப் போக்க டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
டெல்லியில் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படும் நிலையில், சஞ்சய் காலனி பகுதியில் பொதுமக்கள் கேன்களில் தண்ணீரை பிடித்து அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இதேபோன்று, மகாராஷ்டிரா மாநிலத்திலும் பொதுமக்கள் தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள்ளும் நிலையில், நாசிக் பெத் தாலுகாவில் உள்ள பிம்பல்வதி கிராமத்தில் கிணறுகள் வறண்டதால், டேங்கர் லாரி மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.