கடந்த 36 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த மே மாதம் அதிக வெப்பநிலை பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிக வெப்பநிலை பதிவாகி முந்தைய ஆண்டுகளின் சாதனையை முறியடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
1988ஆம் ஆண்டுக்கு பிறகு கடந்த மே 31ஆம் தேதி பிலாஸ்பூரில் 46.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும், மலைப் பகுதியான டேராடூனில் 43.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெற்கு பகுதிகளில் முதலில் அதிகரித்து காணப்பட்ட வெப்பநிலை, பின்னர் வடக்கில் கோடை வெப்பம் சுட்டெரித்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.