கன்னியாகுமரியில் லாரி ஓட்டுநரிடம் காவலர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள கனிமவள கடத்தலை தடுக்க சோதனைச்சாவடியில், லாரிகளில் பாறை கற்களின் எடையை கண்காணிப்பது, முறையான பாஸ் உள்ளதா என்று ஆய்வு செய்வது வழக்கம்.
இந்நிலையில், சோதனை சாவடிக்கு வந்த லாரி ஓட்டுநர்களிடம், பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
பணத்தை வாங்கிய காவலர், புத்தகத்திற்கு அடியில் மறைத்து வைக்கும் காட்சியும் அதில் பதிவாகி உள்ளது.