திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே குடிநீர் சின்டெக்ஸ் டேங்க்கை உடைத்து உள்ளே இறங்கி ரகளை செய்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
மோர்பட்டி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் டேங்க் மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர், தனது வீட்டின் முன்பு சின்டெக்ஸ் டேங்க் இருக்கக் கூடாது என்று கூறி உடைத்துள்ளார்.
மேலும், டேங்கிற்குள் இறங்கி நின்று அவர் ரகளை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், மோர்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி, போலீசில் புகார் அளித்துள்ளார்.