தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
சுரண்டை பகுதியில் அடுத்தடுத்து பைக்குகள் திருடு போவதாக காவல்நிலையத்தில் தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து, சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, ஒரு கடையின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக்கை மர்மநபர் லாவகமாக தூக்கி சென்றது பதிவாகி இருந்தது.
இதையடுத்து, பைக் திருட்டில் ஈடுபட்ட திருச்சிற்றம்பலம் கிராமத்தைச் சேர்ந்த அசோக் குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 5 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.