திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் கோதை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், வார விடுமுறையை கழிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.