குடியாத்தம் அருகே நகைக் கடையில் திருடிய நபரை, சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், தரணம்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான நகைக்கடையில், நகை வாங்குவது போல் வந்த நபர் ஒருவர், மோதிரம் மற்றும் செயின் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.
பின்னர், தன்னிடம் பணம் குறைவாக உள்ளதால், ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுத்து வருவதாக கூறி வெளியே சென்றவர், நீண்ட நேரம் ஆகியும் கடைக்கு திரும்பிவரவில்லை.
இதனால், சந்தேகம் அடைந்த கடை ஊழிர்கள் நகைகளை மதிப்பீடு செய்தபோது, இரண்டரை சவரன் செயின் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.