கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் இருப்பதாக சந்தேகம் - மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!
Sep 12, 2026, 01:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் இருப்பதாக சந்தேகம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 28, 2025, 10:31 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் இருப்பதாக சந்தேகம் உள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், பீகாரைத் தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் பணிகள் எப்படி நடத்தப்படும் என்பது குறித்து, தேர்தல் ஆணையம் விரிவான தகவல்களையும் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்காக ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு அதிகாரி நியமிக்கப்படுவார் என்றும் வாக்குச்சாவடி அதிகாரிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் 3 முறை வந்து சோதனை செய்வார்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அனைத்துத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளும், மாவட்டத் தேர்தல் அதிகாரிகளும் அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து, சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்க இருப்பதையும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உண்மையான வாக்காளரின் வாக்குகள் விடுபட்டால் மேல் முறையீடு செய்து வாக்கு பெறுவதை உறுதிப்படுத்த முடியும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

‘யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே’ என்பது போல, அறிவிப்பு வரும் முன்பே எதிர்ப்பைத் தொடங்கி விட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தின் மூலம், குறிப்பிட்டவர்களின் பெயர்களை நீக்க பாஜக முயற்சி செய்வதாக கூறி இருக்கிறார். இதன் மூலம், தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் வெற்று பெற்று விடும் என்று தனது தொண்டர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்காக தேர்தல் ஆணையம் பயன்படுத்தப்போவது தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களைத் தான். அவர்கள் கட்சி பாகுபாடின்றி தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி பணியாற்றி, போலி வாக்காளர்கள் இருந்தால் நீக்கப் போகிறார்கள். இரட்டை வாக்குகள் இருந்தால் நீக்கப்போகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பு வரும் முன்பே முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? தமிழக அரசு ஊழியர்கள் மீதே அவருக்கு நம்பிக்கையில்லையா? இதிலிருந்தே, முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் தோல்வி பயத்தில் இருப்பது உறுதியாகியுள்ளது எனறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில், 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளுக்கான வாக்காளர் தரவு பகுப்பாய்வில் மொத்தம் 19,476 வாக்காளர்கள் சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் இருப்பதாக கடந்த மாதம் தகவல் வெளியானது. 4,370 இரட்டை வாக்காளர் பதிவுகளும், போலி முகவரியுடன் 9,133 வாக் காளர்களும் உள்ளதாக தெரிகிறது.

கொளத்தூர் தொகுதியில் உடனடியாக தணிக்கை மேற்கொண்டு, போலி வாக்காளர் களை நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் ஏற்கனவே புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் தொகுதியிலேயே இப்படி நிலைமை என்றால் மற்ற தொகுதிகளிலும் எவ்வளவு போலி வாக்காளர்கள் இருக்கக்கூடும்? என்றும் எல்.முருகன் தெரிவித்துளளார்.

Tags: Kolathur constituencysir?fake votersTamil NaduElection commissionBiharminister l murugan
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – தலைமை தேர்தல் ஆணையம்

Next Post

தமிழக முதல்வருக்கு தோல்வி பயம் – நயினார் நாகேந்திரன்

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies