ஹாட்ரிக் நாயகன் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் விவிஐபிக்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில், ரிலையன்ஸ் நிறுவன குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவர் குடும்பத்தினர் பங்கேற்றனர். இதேபோல, அதானி நிறுவனத்தின் தலைவர் கௌதம் அதானி மற்றும் அவரது குடுபத்தினர் கலந்து கொண்டனர்.
திரையுலக பிரபலங்களான நடிகர் அக்ஷய் குமார், ஷாருக்கான், அக்ஷய் குமார் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் பிரதமர் மோதியின் பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.