டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடியுடன், அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்பட 31 கேபினட், 8 புதுமுகங்கள் மொத்தம் 72 பேர் மத்திய அமைச்சர்களாகவும் இணையமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.
பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த நிதின் கட்கரி, ஆகியோர் மீண்டும் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
பாஜக தேசிய தலைவராக இருந்த ஜே.பி.நட்டா, மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றனர்.
மத்திய நிதி அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஜெய்சங்கர் ஆகியோர் மீண்டும் மத்திய அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
ஹரியானாவின் முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஹெச்.டி. குமாரசாமி ஆகியோர் மத்திய அமைச்சராக பதவியேற்றனர்.
மின்சாரம், நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சராக இருந்த பியூஷ் கோயல், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் எஃகு அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான், ஆகியோர் மத்திய அமைச்சராக மீண்டும் பதவியேற்றுக்கொண்டனர்.
பீகார் முன்னாள் முதலமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சி, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங், அசாமின் முன்னாள் முதலமைச்சர் சர்பானந்த சோனாவால் ஆகியோரும் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றனர்.
முன்னாள் மத்திய அமைச்சர்கள் வீரேந்திர குமார், பிரகலாத் ஜோஷி ஆகியோரும் மத்திய அமைச்சராக பதவியேற்றனர்.
ஒடிசாவை சேர்ந்த ஜுவல் ஓரம், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக இருந்த கிரிராஜ் சிங், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த ஸ்ரீஅஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரும் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றனர்.
சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியா, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சராக இருந்த பூபேந்திர யாதவ், மத்திய நீர்வளத் துறை அமைச்சராக இருந்த கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோரும் மத்திய அமைச்சராக பதவியேற்றுக்கொண்டனர்.
மத்திய அமைச்சர்களாக இருந்த அன்னபூர்ணா தேவி, கிரண் ரிஜிஜூ, ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றனர்.
மன்சுக் மாண்டவியா, ஜி.கிஷன் ரெட்டி, சி.ஆர்.பாட்டீல் ஆகியோரும் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.