சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கீழப்பிடாவூர் பகுதியைச் சேர்ந்த 32 பேர் ஒரே வேனில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றுக்கொண்டிருந்தனர்.
அப்போது செம்பனூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் கலைஞர் என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.