பீகாரில், தண்டவாளத்தில் நின்ற ரயிலை பொதுமக்கள் கைகளால் தள்ளிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரயிலின் ஒரு பெட்டியில் திடீரென தீ பிடித்ததால், மற்ற பெட்டிகளில் தீ பரவாமல் இருக்க ரயிலை பொதுமக்கள் திரண்டு தள்ளி சென்றனர்.
இதுவரை பாதி வழியில் நிற்கும் பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்களை தான் மக்கள் தள்ளிச் செல்வதை பார்த்திருக்கிறோம். தற்போது தான் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு ஒரு ரயிலை தள்ளி செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.