3-ஆவது முறையாக தொடர்ந்து பதவியேற்ற பிரதமர் மோடி, விவசாயிகள் பயன்பெறும் வகையிலான கோப்புகளில் முதல் கையெழுத்திட்டார்.
பிரதமராக பதவியேற்றதைத் தொடர்ந்து, தமது அலுவலகத்துக்கு மோடி சென்றார். அப்போது அலுவலக ஊழியர்கள் கரவொலி எழுப்பி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, பிஎம் கிசான் நிதியுதவி திட்டத்தின் கீழ், 17-ஆவது தவணை நிதியை விடுவிப்பதற்கான கோப்புகளில் பிரதமர் மோடி கையொப்பமிட்டு தனது அலுவல்பூர்வ பணியைத் தொடங்கினார்.
பி.எம் கிசான் நிதியுதவி திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் வீதம் மூன்று தவணையாக 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
இதற்காக 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிஎம் கிசான் நிதி திட்டத்தின்கீழ், 9 கோடியே 30 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர் என தகவல் வெளியாகியுள்ளது.