ஆந்திர மாநில முதலமைச்சராக 4-வது முறையாக தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு நாளை பதவியேற்க உள்ளார்
ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில், தெலுங்கு தேசம் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. 175 சட்டப்பேரவை தொகுதிகளில், 164 தொகுதிகளையும், 25 மக்களவை தொகுதிகளில் 21 தொகுதிகளையும் தெலுங்கு தேசம் கூட்டணி கைப்பற்றியது. கடந்த முறை 151 தொகுதிகளைக் கைப்பற்றிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, இம்முறை வெறும் 11 சட்டப்பேரவை தொகுதிகளில் மட்டுமே வென்றது.
144இதனைத் தொடர்ந்து, ஆந்திர மாநில முதலமைச்சராக நான்காவது முறையாக சந்திரபாபு நாயுடு நாளை பதவியேற்கவுள்ளார். அவரது பதவியேற்பு விழா, கிருஷ்ணா மாவட்டம் கன்னவரம் அருகே, 14 ஏக்கர் பரப்பளவிலான கேசரபல்லி ஐடி பார்க் மைதானத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில், பிரதமர் மோடி, பல்வேறு மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்கவுள்ளனர். பதவியேற்ற பின்னர், சந்திரபாபு நாயுடு நாளை மறுதினம் ஏழுமலையானை தரிசிக்க உள்ளார்.