ஐரோப்பிய ஒன்றியத் தேர்தலில் தோல்வியடைந்ததால் பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் அதிபர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கான நாடாளுமன்ற தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. இதில் பிரான்ஸ், பெல்ஜியம் உள்பட 27 நாடுகள் கலந்து கொண்டன. இந்நிலையில் பெல்ஜியம் நாட்டின் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ படு தோல்வியடைந்தார். இதனால் அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதன்படி பெல்ஜியம் மன்னர் பிலிப்பை சந்தித்து அவர் தனது பதவியில் இருந்து விலகுவார் என அநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேபோல் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தலைமையிலான ஆளுங்கட்சி ஐரோப்பிய ஒன்றிய தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. அவரது மறுமலர்ச்சி கட்சி 15 சதவீதம் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தது. இதனால் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு புதிய தேர்தலுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.