Paytm நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Paytm நிறுவனத்தின் வங்கி சேவைக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்ததைத் தொடர்ந்து, கடந்த 4 மாதங்களில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், செலவைக் குறைப்பதற்காக Paytm நிறுவனம் மேலும் ஆட்குறைப்பு செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஈடுசெய்ய பணிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.