தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 20ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர்,தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 24-ந்தேதி தொடங்க இருந்த நிலையில், முன்கூட்டியே வரும் 20-ந்தேதி காலை 10 மணிக்கு தொடங்கவுள்ளதாக கூறினார்.
விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் சட்டமன்ற உறுப்பினராக நாளை பதவி ஏற்பார் எனவும் கூறினார்.
மேலும், சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன்னிட்டு அலுவல் ஆய்வு குழு கூடி, கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.