விஜயவாடாவில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஆந்திர முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு ஆளுநர் அப்துல் நசீரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை பெற்றது. இதைத்தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் விஜயவாடாவில் நடைபெற்றது.
அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டப் பேரவைக் குழு தலைவராக சந்திரபாபு நாயுடுவை ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் முன்மொழிந்தார். இதைத்தொடர்ந்து, கூட்டணி கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவுடன், என்டிஏ சட்டமன்ற குழுத் தலைவராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய சந்திரபாபு நாயுடு, ஆந்திராவில் N.D.A அரசின் , முதலமைச்சராக ஆதரவளித்த பாஜக, ஜனசேனா மற்றும் தெலுங்கு தேச எம்எல்ஏக்களுக்கு நன்றி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, சந்திரபாபு நாயுடு ஆளுநர் அப்துல் நசீரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.