தருமபுர ஆதீனத்தை பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளிடம் பணம் கேட்டு மிரட்டியதாக காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது.
இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். மீதமுள்ள 4 பேர் கைது செய்யப்படாததால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யமுடியாமல் இருந்தது.
இந்நிலையில் தருமபுர ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே அவரை உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட செந்திலிடம் தொடர்ந்து விசாரனை நடைபெற்று வருகிறது.