மயிலாடுதுறையில், பள்ளி வகுப்பறையை சுத்தம் செய்ய மறுத்த மாணவியை ஆசிரியர் அடித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சின்னநாகங்குடியை சேர்ந்த செல்வராஜ் ஜெயந்தி தம்பதியினர், தனது இரண்டாவது மகளை, மயிலாடுதுறையில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்த்துள்ளனர்.
பள்ளி முடிவடைந்து வீட்டிற்கு செல்லும் போது, ஆசிரியர் ஒருவர் வகுப்பறையை சுத்தம் செய்ய சொல்லி மாணவியை அடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், படிக்க வந்த மகளை எப்படி சுத்தம் செய்ய சொல்லாம் என்று கேள்விகள் எழுப்பி பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், தனது மகளை வேறு பள்ளியில் சேர்ப்பதாக கூறி மாற்றுச் சான்றிதழை பெற்று சென்றனர்.